ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் கனரக வாகனம் மற்றும் சிறிய ரக வாகனங்களுக்கான ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் பல செயல்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் ஓட்டுநர்களுக்கான பயிற்சிப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த துறையைச் சார்ந்தவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த பயிற்சி பள்ளியில் பணிபுரியும் பல்வேறு தரப்பினர் ஊரடங்கிள் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளைத் கட்டுப்பாடுடன் கூடிய தளர்வு அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 60 நாட்களுக்கும் மேலாக பயிற்சி பள்ளி நடத்தப்படாமல் இருப்பதால் இங்கு பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

Comments