கொல்லிமலை வாரச் சந்தைகளில் தொடரும் மந்த நிலை

நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலையில் தற்போது மந்த நிலை நீடித்து வருகிறது.



வருடா வருடம் கோடை மாதத்தில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் மாநிலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைப் பகுதியில் குவிய தொடங்குவர். 

இந்த நிலையில் இந்த வருடம் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவும் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மேலே அனுமதிக்காமல் இருப்பதால் இப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதாவது இப்பகுதியில் முக்கிய தொழிலாக மிளகு பலா பழம் மற்றும் பல்வேறு தானிய வகைகள் கிழங்குகள் போன்றவைகள் வாரச் சந்தைகளில் அங்குள்ள விவசாயிகள் மூலம் விற்கப்பட்டு வந்தன.

இந்த வருடம் கொரோனவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொல்லிமலையில் பயிரிட்ட பல்வேறு வகையான விவசாய பொருட்கள் தற்போது அழுகும் நிலையில் உள்ளது.

விற்பனைக்காக  வைக்கப்பட்டுள்ள மலை வாழைப்பழம் பலாப்பழம் மிளகு போன்ற பல்வேறு பொருட்களை வாங்க ஆழ் இல்லாததால் கொல்லிமலை வாரச்சந்தை தொடர்ந்து மக்கள் கூட்டம் இன்றி சரிவை சந்தித்து வருகிறது.

முன்னதாக கொல்லி மலைக்கு மேலே செல்லும் இரண்டு வழிகளிலும் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தால் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் மேலே செல்லாதவாறு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் இதுவரை கொல்லிமலைப் பகுதியில் யாரு ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.



மேலும் கொல்லிமலை மக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் போன்ற பல்வேறு கொரனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவர கடைபிடித்து வருகின்றன. அவசியமற்ற பயணங்கள் ரத்து செய்து தேவையான பொழுது தங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு அவசியமற்ற பயணங்களை ரத்து செய்து பாதுகாப்புடன் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்