நாமக்கல் மாவட்ட வணிகர்களுக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு
சாத்தான்குளம் ஜெயராஜ் & பென்னிக்ஸ் அவர்களின் கொடூர படுகொலையை கண்டித்து 26/06/2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழகம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்தை மிக சிறப்பாக நடத்தி வணிகர்கள் ஒற்றுமையை உறுதிபடுத்தினர்
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று நாமக்கல் நகரில் 75% கடைகளும், திருச்செங்கோடு மற்றும் இராசிபுரம் நகர் பகுதிகளில் 80% கடைகளும், ஊரக பகுதிகளில் 90% கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
தென்மாவட்டம் தவிர்த்து நாமக்கல் மற்றும் சேலத்தில் இந்த கடையடைப்பு போராட்டம் மிகப் பெரிய அளவில் நடைபெற்றது.
இதற்கு நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் ஜெயகுமார் வெள்ளையன் அவர்கள் இன்று நன்றி தெரிவித்தார்.
Comments
Post a Comment