டீ குடிக்க முடியாமல் சிரமப்படும் பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்
தமிழகத்தில் டீக்கடைகளில் டீ விற்பனை செய்வதில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதால் பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் டீ குடிக்க முடியாமல் தற்போது சிரமப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் அதிக மக்களால் செய்யப்படும் விசைத்தறி தொழிலாளர்கள் இரவு மற்றும் பகல் என இரண்டு ஷிப்ட் முறையில் அங்கு பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இரவு நேரங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தூக்கத்தை விரட்ட டி என்பது ஒரு அற்புதமான பானம் ஆகும்.
தற்போது தமிழக அரசின் அறிவிப்பின்படி டீக்கடைகள் திறப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருப்பதால் பகுதிகளில் இரவு நேரங்களில் இயங்கும் டீக்கடைகள் தற்போது மூடப்படுகின்றன இதனால் கண் விழித்து வேலை பார்க்கும் விசைத்தறி தொழிலாளர்கள் தற்போது இரவு நேரங்களில் டீ குடிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர் இதனால் தாங்கள் செய்யும் தொழிலில் சற்று தொய்வு ஏற்பட்டு உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
Comments
Post a Comment